search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி திருவிழா"

    • ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது.
    • பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பாக ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பாக ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் ஸ்ரீமத் பரமானந்தா சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணு பிரசாத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கோவில் செயல் அலுவலர் இளமதி முன்னிலை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ வரவேற்றார். பிரம்மா குமாரிகள் கிளை நிலையத்தின் சார்பாக போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகமும் சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. முடிவில் முன்னாள் சுகாதார ஆய்வாளர் பழனியப்பன் நன்றி கூறினார். முன்னாள் சேர்மன் முருகேசன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • முத்துப்பல்லக்கு வீதிஉலா நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது.
    • முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெற்ற போது மழையும் பெய்து கொண்டே இருந்தது.

    தஞ்சை மாநகரில் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் குருபூஜையையொட்டி முத்துப்பல்லக்கு விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். இந்த விழாவின்போது தஞ்சையில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜவீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கு விழா நேற்று நடந்தது

    தஞ்சை மேலஅலங்கத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் காலையில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி புஷ்ப அலங்காரத்தில் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தஞ்சை சின்ன அரிசிகார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் முத்து பல்லக்குவிழா நடந்தது. விழாவையொட்டி பாலதண்டாயுதபாணியும், விநாயகரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருஞானசம்பந்தர் படமும் வைக்கப்பட்டு இருந்தது.

    தஞ்சை மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் அணிவித்து பூஜை நடந்தது. இரவு விநாயகரும், திருஞானசம்பந்தரும் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர். மானம்புச்சாவடியில் உள்ள கமலரமண்ய விநாயகர் கோவிலில் இருந்து முத்துப்பல்லக்கில் கமலரண்ய விநாயகரும் எழுந்தருளினர்.

    இதேபோல் கீழவாசல் வெள்ளை பிள்ளையார்கோவிலில் இருந்து வெள்ளை பிள்ளையாரும், கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து சுப்பிரமணியசாமியும், தஞ்சை ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து பாலதாண்டாயுதபாணியும், திருஞானசம்பந்தரும் பல்லக்கில் எழுந்தருளினர்.

    இதேபோல் தஞ்சை மாநகரில் கீழவாசல் உஜ்ஜைனி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர் கோவில், வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் ரோட்டில் உள்ள வடபத்திரகாளியம்மன் கோவில், ரெட்டிப்பாளையம் வெற்றி முருகன் உள்ளிட்ட 11 கோவில்களில் இருந்து முத்துப்பல்லக்கில் விநாயகரும், முருகப்பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன. திரளான பக்தர்கள் தரிசனம் இந்த பல்லக்குகள் எல்லாம் தஞ்சை தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகியவற்றில் மேளதாளங்கள் முழங்க வலம் வந்தன. முத்துப்பல்லக்கு வீதிஉலா நேற்றுஇரவு தொடங்கி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெற்ற போது மழையும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீதி உலா தாமதமாக புறப்பட்டது. பல கோவில்களில் இருந்து மழை நின்ற பின்னரே முத்துப்பல்லக்கு புறப்பட்டு வந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • தெய்வானை அம்மனை சமாதானப்படுத்த நாரதமுனிவர் தூது சென்றார்.
    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலையில் தந்த பல்லக்கு, மாலையில் தங்கமயில், தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்தது. நேற்று வைகாசி விசாக திருவிழா கொடிஇறக்குதலுடன் நிறைவு பெற்றது.

    முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தெய்வானை அம்மனின் திருஊடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்து தெய்வானை அம்மன் சப்பரத்தில் இருந்து இறங்கி தனிப்பல்லக்கில் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமாதானப்படுத்த நாரதமுனிவர் தூது சென்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடையவே வீரபாகு தேவர் தெய்வானை அம்மனிடம் தூது சென்று சமாதானப்படுத்தினார். வீரபாகு தேவராக ஓதுவார் நாகராஜ் 3 முறை தூது சென்று திருஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளியும், தெய்வானையும் ஒருவரே என்று விளக்கி சமரசம் செய்தார்.

    அதன்பின் கோவில் நடை திறந்து முத்துக்குமாரசுவாமியுடன், தெய்வானை அம்மன் சேர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • கிருஷ்ண பெருமானுக்கு மிகவும் பிரியமான மாதம் வைகாசி மாதமே.
    • வைகாசி மாதத்தின் கடைசி மூன்று நாட்களாவது நீராட வேண்டும்.

    கிருஷ்ண பெருமானுக்கு மிகவும் பிரியமான மாதம் வைகாசி மாதமே. இந்த மாதத்தில் பகவான் மனிதர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி கங்கை, யமுனை, காவேரி, சிந்து, கோதாவரி, ச ரஸ்வதி, துங்கபத்ரா, கிருஷ்ணா போன்ற எல்லாப் புனித நதிகளையும் அழைத்து வைகாசி மாதத்தில் சூரிய உதயம் முதல் ஆறு நாழிகை வரை எல்லா தீர்த்தங்களிலும் தங்கி இருக்கும்படி கூறினார்.

    அந்த சமயத்தில் புனித நதிகளில் நீராடுபவர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பேன் என்றும் விஷ்ணு கூறினார். உடனே அவரிடம் புண்ணிய தீர்த்தங்கள் ஒரு கேள்வி கேட்டன. பாவிகள் எங்களிடம் விட்ட பாவத்தை நாங்கள் எப்படிப் போக்கிக் கொள்வது? எனக் கேட்டன.

    வைகாசி மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டாலும் ஏகாதசி, துவாதசி, பவுர்ணமி தினங்களிலாவது நீராட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வைகாசி மாதத்தின் கடைசி மூன்று நாட்களாவது நீராட வேண்டும். அப்படி நீராடாதவர்களிடம் உங்களிடம் சேரும் பாவங்களை விட்டு விடுங்கள் என்றார். பகவான் கிருஷ்ணர் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருகிறார். அப்போது நீராடி இறைவனைப் பூஜித்தபடி இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

    • பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
    • விடிய, விடிய பல்லக்கில் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.

    வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை தர்மராஜன் கோட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மே மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் அலகு குத்தி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி பல்லக்கில் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு வல்லபகணபதி கோவிலில் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து பல்லக்கில் சுவாமி புறப்பட்டு வாடிப்பட்டி நகர் முழுவதும் முக்கியவீதிகளில் பல திருக்கண்களை அடைந்து தாதம்பட்டி, நீரேத்தான், பேட்டைபுதுார், போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ரெயில்நிலையம், சொக்கையாசுவாமிகள் மடம் வழியாக மறுநாள் மதியம் 12 மணிக்கு கோவிலை வந்து அடைந்தது. விடிய, விடிய பல்லக்கில் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • தேவபுரீஸ்வரர், தேன்மொழியம்மைக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    கீழ்வேளூர் அருகே தேவூரில் உள்ள தேவபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 2-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.பின்னர் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று சாமி படி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேவ புஷ்கரணியில் சாமி தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், மகா அபிஷேகமும் நடந்தது.

    இதை தொடர்ந்து தேவபுரீஸ்வரர், தேன்மொழியம்மைக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச்சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து மூர்திகம் (மூஞ்சூர்) வாகனத்தில் விநாயகர், மயில் வானத்தில் முருகன், அன்னப்பட்சி வாகனத்தில் மதுரநாயகி அம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி சாமி வீதி உலா நடந்தது.

    வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பிராயச்சித்த அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர், உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது
    • இன்று கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 11-வது நாளான நேற்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

    தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறத்தல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை ஆகியவை நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேரில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.

    விழாவில் மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவி உடை அணிந்த அய்யாவழி பக்தர்கள், 'அய்யா சிவ சிவ அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக சிறுவர்-சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தலைமைப்பதியின் முன்பு இருந்து புறப்பட்ட தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வந்த போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக வைத்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது.

    தேரோட்ட நிகழ்ச்சியில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இருந்து சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் நேற்று இரவு 7 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வருதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் ஏறி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞானசம்பந்தரை தரிசனம் செய்தனர்.

    கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி மற்றும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை நடந்தது. கடந்த 13-ந்தேதி திருஞானசம்பந்தர் முத்துப்பந்தல் விழா தொடங்கியது. விழாவில் ஞானசம்பந்தருக்கு சாமி, அம்மன் காட்சி அளித்து திருமுலைப்பால் அளிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. நேற்றுமுன்தினம் ஞானசம்பந்தருக்கு முத்துக்கொண்டை, முத்துக்கொடை, முத்து சின்னங்களுடன் முத்து திரு ஓடத்தில் வீதி உலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பந்தல் விழா நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் ஏறி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து முத்துப்பல்லக்கு திருமேற்றளிகை கைலாசநாதர் கோவிலுக்கும், காலை 10 மணிக்கு திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வரர் கோவிலுக்கும், மதியம் 12 மணிக்கு பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞானசம்பந்தரை தரிசனம் செய்தனர். இரவு தேனுபுரீஸ்வரர், ஞானாம்பிகை அம்பாள் முத்து விமானத்தில் காட்சியளிக்க ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து இருந்தனர்.

    • பிரம்மோற்சவ விழாவை பல விழாக்களில் இதுவும் ஒன்று என்பதாகவே பலரும் நினைக்கிறார்கள்.
    • தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்கள் வருமாறு:-

    கோவில்களில் நடத்தப்படும் பிரம்மோற்சவ விழாவை பல விழாக்களில் இதுவும் ஒன்று என்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்கள் வருமாறு:-

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்,

    திருவல்லிக்கேணி, ஸ்ரீபார்த்தசாரதி கோவில்,

    ஆழ்வார் திருநகரி (ஸ்ரீநம்மாழ்வாருக்குப் பிரம்மோற் சவம்),

    மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமர்,

    மகாபலிபுரம் ஸ்ரீஸ்தல சயன பெருமாள்,

    திருநாராயணபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள்,

    காஞ்சி ஸ்ரீவைகுண்ட பெருமாள்,

    சென்னை அமைந்தகரை ஸ்ரீபிரசன்ன வரதராஜர்,

    மதுரை ஸ்ரீகூடலழகர்,

    மதுரை திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள்,

    திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண் யேஸ்வரர்,

    பட்டீஸ்வரம் ஸ்ரீதேணு புரீஸ்வரர்,

    திருக்கண்ணங்குடி ஸ்ரீகாள ஹஸ் தீஸ்வரர்,

    திருப்பனையூர் ஸ்ரீசௌந்த ரேஸ்வரர்,

    கஞ்சனூர் ஸ்ரீஅக்னி புரீஸ்வரர்,

    கும்பகோணம் ஸ்ரீகும் பேஸ்வரர்,

    திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி,

    மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர்,

    திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர்,

    பொள்ளாச்சி ஸ்ரீசுப்ரமணியர்,

    சென்னை வடபழநி ஸ்ரீதண்டா யுதபாணி,

    சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் ஆகிய ஆலயங்களில் வைகாசி மாதத்தில் உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது.

    • மாலை வேளையில் வானில் தோன்றும் சந்திரனை தரிசனம் செய்வது மிகவும் சிறந்தது.
    • இன்று தானம் செய்வது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும்.

    வைகாசி பௌர்ணமி தினம் வருடம் முழுவதும் வரும் மற்ற பௌர்ணமி தினங்களை காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக இருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வைகாசி பௌர்ணமி தினமான இன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும்.

    மாலை வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த வைகாசி பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்ளலாம்.

    மற்ற எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. எனவே புண்ணியம் மிகுந்த இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள், குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும்.

    • மொட்டையரசு திடலை 7 முறை சுற்றி வந்த பஞ்ச உபசார நிகழ்வு நடந்தது.
    • பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி கடந்த 9 நாட்களாக தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் விசாக விழா விசேஷமாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் நிறைவாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடந்தது. இதனையொட்டி முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்கக்குதிரையில் அமர்ந்து கோவில் வாசலில் இருந்து புறப்பட்டு என்ஜினீயர் கல்லூரி வளாகத்தில் உள்ள மொட்டையரசு திடலுக்கு வந்தார்.

    இதனை தொடர்ந்து மொட்டையரசு திடலை சேர்ந்து உள்ள 70 மண்டபங்களிலும் முருகப்பெருமான் எழுந்தருளினார். ஒவ்வொரு மண்டபத்திலும் சுவாமிக்கும், அம்பாளுக்குமாக சிறப்பு பூஜையும், தீப, தூப, ஆராதனையும் நடந்தது. காலையில் இருந்து இரவு வரை மொட்டையரசு திடலிலே சுவாமி தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அங்கு ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மதிய வேளையில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக வெள்ளரி, பானக்கரம், நீர்மோர் மற்றும் பாகற்காய் குழம்பு படைத்து நெய்வேத்தியம் நடைபெற்றது. இதனையடுத்து மொட்டையரசு திடலை 7 முறை சுற்றி வந்த பஞ்ச உபசார நிகழ்வு நடந்தது. மேலும் பவுர்ணமியையொட்டி நிலா சோறு வைபவம் நடந்தது.

    இதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் மொட்டையரசு திடலில் இருந்து கோவில் இருப்பிடம் வரை பூப்பல்லக்கில் சுவாமி வலம் வந்தார். சுவாமி புறப்பாட்டில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுரைமாநகர் உதவி கமிஷனர் அலுவலகம் என்று பல இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த திருக்கண்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழாவின் எட்டாம் திருவிழாவை முன்னிட்டு அய்யா வைகுண்ட சாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த 27-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று அய்யா வைகுண்ட சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்ட சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி கொலுவீற்றிருக்க கலிவேட்டைக்கு வாகனம் புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சிக்கு பால.ஜனாதிபதி தலைமை தாங்கினார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம் தலைமைப்பதியை சுற்றிவந்து முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு கூடியிருந்த திரளான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டாம் திருவிழா பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா. வைகுந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    முத்திரி கிணற்றங்கரையில் இருந்து புறப்பட்ட குதிரை வாகனம் சுற்றுப்பகுதி கிராமங்களான செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன்தேரிவிளை, காமராஜபுரம் வழியாக இரவு 9 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. கிராமங்களுக்கு வாகனம் செல்லும் போது அப்பகுதி அய்யாவழி பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் படைத்து ஆசி பெற்றனர். இரவு 10 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யா வைகுண்ட சாமியின் தவக்கோல காட்சி நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. கலிவேட்டை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை நடைபெறும் பத்தாம் திருவிழாவில் அய்யா வைகுண்ட சுவாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும் இரவு வாகன பவனியும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவையும் நடைபெறுகிறது.
    ×